தாவரவியல் பூங்காவில் மெர்பாவ் மரக்கன்றை எம்பாலோ நட்டு வைத்தார்!

- Muthu Kumar
- 06 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 6-
மலேசியாவுக்கான தமது மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை நேற்று பெர்டானா தாவரவியல் பூங்காவில் மெர்பாவ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்தார் கினி-பிசாவ் அதிபர் உமாரோ சிசோகோ எம்பாலோ.
காலை மணி 10.10 அளவில், பெர்டானா தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த அவரையும் இதா பேராளர்களையும் கோலாலம்பூர் டத்தோ பண்டார், டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முஹமட் ஷாரிஃப் வரவேற்றார்.
இன்திஸா பலெம்பனிகா என்று அறிவியல்பூர்வமாக அழைக்கப்படும் மெர்பாவ் மரக்கன்றை லாமான் பெர்டானாவில் நட்ட பின்னர், பெர்டானா தாவரவியல் பூங்காவை வாகனம் மூலமாக பத்து நிமிடத்திற்கு எம்பாலோ பார்வையிட்டார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நாட்டின் தேசிய மரமாக மெர்பாவ் மரம் அறிவிக்கப்பட்டது.கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்த அதிபர் எம்பாலோவுக்கு நேற்று பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டதுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பையும் அவர் மேற்கொண்டார்.
Lawatan rasmi tiga hari Presiden Guinea-Bissau, Umaro Sissoco Embaló ke Malaysia berakhir dengan penanaman pokok Merbau di Taman Botani Perdana. Beliau turut mengadakan pertemuan rasmi dengan Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *