வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிள்! ஆடவர் பலி!

top-news

ஜூன் 13,

எதிரில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 37 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று மாலை 6.20 மணிக்கு விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சுகாதார அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். சுமார் 6 மணிக்குப் பிலாந்தோங்கிலிருந்து Permas செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயது பெண் ஓட்டுநர் செலுத்திய Myvi வாகனம் பெர்மாஸில் சாலையில் திடீரென U-TURN செய்ததால் வாகனத்தைத் தவிர்க்க முடியாமல் மோட்டார் சைக்கிள் வாகனத்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்குக் காரணமான Myvi வாகனமோட்டியான 30 வயது பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தென் ஜொகூர் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat கேட்டுக்கொண்டார்.


Seorang penunggang motosikal berusia 37 tahun maut selepas merempuh bahagian belakang kereta Myvi yang membuat pusingan U secara mengejut di Permas, Johor. Pemandu wanita berusia 30 tahun sedang disiasat. Polis meminta saksi tampil memberikan maklumat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *