டீசல் மானிய அறிவிப்பால் தவிக்கும் கடத்தல்காரர்கள்! அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் திணறல்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஜூன் 3: பெட்ரோல் நிலையங்களில் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அமலாக்கத்தை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கையால், கடத்தல்காரர்கள் தங்கள் செயல் முறையை மாற்றத் தூண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான்/தாய் எல்லை வழியாக டீசல் மற்றும் பெட்ரோலை அனுப்பும் கடத்தல்காரர்கள், அதிகாரிகளால் குறிப்பாக மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் பொது நடவடிக்கைப் படை (GOF) உறுப்பினர்களால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க  தங்கள் நடவடிக்கைகளை மாற்றியுள்ளதாக சிலா ஆதாரங்களின் வழி தெரியவந்துள்ளது

எல்லையில் இருந்து 25 கிமீ சுற்றளவில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையங்களில் முன்பு கடத்தல்காரர்கள் எரிபொருளை வாங்கினால், அவர்கள் இப்போது மேலும்  சில மைல் தூரம் பயணிக்கத் தயாராக உள்ளனர்.

டீசல் மானியத்தை சீரமைத்ததன் வழி அரசு எடுத்த நடவடிக்கை பலனளித்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

 டீசல் மானியத்தின் வழி, அரசாங்கம் தினசரி விற்பனையை 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்க முடிந்தது மட்டுமல்லாமல், இந்த நடவடிக்கை கடத்தல்காரர்களுக்கு ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

பல கடத்தல்காரர்கள், அமலாக்க அதிகாரிகள் தங்கள் சோதனைகளை முடுக்கிவிட்டதை உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் இப்போது எரிபொருளை வாங்குவதற்கு சுற்றளவுக்கு வெளியேயும் கோத்தா பாரு நகரம் வரையிலும் பயணிக்கத் தயாராக உள்ளனர் என்று ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

கடத்தல்காரர்கள் பொதுவாக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பழைய புரோட்டான் வாஜாவை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் இல்லாத பெட்ரோல் நிலையங்களை அவர்கள் தேடுவார்கள், இதனால் அவர்கள் விரும்பும் அளவுக்கு எரிபொருளை நிரப்ப முடியும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடத்தல்காரர்களின் புதிய தந்திரோபாயங்கள் குறித்து அமைச்சும் அறிந்திருப்பதாக கிளந்தான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர்களின் புதிய நடவடிக்கை எதுவாக இருந்தாலும், எங்கள் அதிகாரிகள் அவர்களைக் கண்டுபிடிப்பார்கள். இந்த கடத்தல்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து  செயல்படும் பெட்ரோல் நிலைய நடத்துனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த திங்களன்று, சந்தேகத்திற்குரிய கடத்தல்காரர்களுக்கு எரிபொருளை விற்றதற்காக எட்டு பெட்ரோல் நிலைய நடத்துநர்களுக்கு மொத்தம் RM24,000 அபராதம் விதிக்கப்பட்டதாக அஸ்மான் கூறினார்.

பல ஆண்டுகளாக சந்தேகத்திற்கிடமான கடத்தல்காரர்களுடன் கூட்டு வைத்துள்ள ஆபரேட்டர்களுக்கு, மாநில அமைச்சகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் கூட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பெட்ரோல் நிலையங்களை நடத்தும் 8 ஆபரேட்டர்களுக்கு ஜனவரி முதல் ஜூன் 29 வரை அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், பெங்காலன் குபோரில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, பொதுவாக கடத்தல்காரர்களால் மீண்டும் மீண்டும் டீசல் வாங்க பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *