அன்வாரின் வழக்கை விசாரிக்க மாமன்னர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்! – முகைதீன்!

- Sangeetha K Loganathan
- 13 Jun, 2025
ஜூன் 13,
பிரதமர் அன்வார் மீது அவரின் முன்னாள் உதவியாளர் Muhammed Yusoff Rawther தொடுத்திருக்கும் வழக்கை விசாரிக்க மாமன்னர் தலைமையிலானச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார். அன்வார் சம்மந்தப்பட்டிருக்கும் வழக்கைச் சிறப்புக் குழு விசாரிப்பது மட்டுமின்றி அந்த சிறப்புக் குழு மாமன்னரின் தலைமையில் இயங்கும் அனைத்துலக ராயல் விசாரணை ஆணையமான Suruhanjaya Siasatan Diraja விசாரணைக் குழுவாக இருக்க வேண்டும் என Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார்.
அனைத்துலக ராயல் விசாரணை ஆணையமான Suruhanjaya Siasatan Diraja என்பது United Kingdom, Australia, Canada, New Zealand, Norway, Malaysia, Mauritius, Saudi Arabia என 8 முடியாட்சி நாடுகளில் மட்டுமே இருக்கும் ஒரு விசாரணை ஆணையமாகும். இந்த விசாரணை ஆணையம் நேரடியாக மாமன்னருக்கு மட்டுமே விளக்கமளிக்கும் ஓர் உயரிய விசாரணை ஆணையமாகும். கடந்த 1965 மலேசியாவில் இந்த ராயல் விசாரணை ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 13 வழக்குகளை மட்டுமே விசாரித்துள்ளது. அதில் 10 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில் 3 வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருக்கிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு சிறையில் இருந்த அன்வார், காவல் அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்பட்டது தொடர்பான விசாரணையையும் இதே ராயல் விசாரணை ஆணையமான Suruhanjaya Siasatan Diraja நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Kerajaan digesa menubuhkan Suruhanjaya Siasatan Diraja bagi menyiasat kemungkinan berlakunya penipuan dan salah guna kuasa dalam siasatan serta pendakwaan, terutama kes melibatkan bekas pembantu penyelidik, Muhammed Yusoff Rawther. Gesaan itu dibuat Pengerusi Perikatan Nasional (PN), Tan Sri Muhyiddin Yassin susulan keputusan Mahkamah Tinggi Kuala Lumpur yang melepas dan membebaskan Muhammed Yusoff daripada pertuduhan jenayah tanpa perlu membela diri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *