அன்வாரின் மனிதாபிமானமற்ற செயல்! – முகைதீன் கண்டனம்!

- Sangeetha K Loganathan
- 11 Jun, 2025
ஜுன் 11,
அரசாங்கத்தின் Petroliam Nasional Bhd நிறுவனத்திலிருந்து 5,000 பணியாளர்களை நீக்கியிருப்பது கொடுமையானது என்றும் இதனை பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது அன்வாரின் மனிதாபிமானமற்ற செயலை வெளிப்படுத்துவதாக முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார். நாட்டின் அடையாளங்களில் ஒன்றான Petronas நிறுவனத்தில் இப்படியானச் செயல் நிகழ்வது நாட்டிற்கும் நாட்டின் நிர்வாகத்திற்கும் அவமானத்தைத் தேடி தரும் என Tan Sri Muhyiddin Yassin நினைவூட்டினார்.
நாட்டின் பட்ஜெட்டுக்கான நிதியில் Petronas வருவாய் முக்கிய பங்களிப்பதாகவும் ஆனால் அன்வாரின் ஆட்சியில் Petronas நிறுவனத்தின் வருவாயிலிருந்து பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தான எந்தவொரு குறிப்பும் இல்லை என Tan Sri Muhyiddin தெரிவித்தார். முந்தைய காலங்களில் வளமாக இருந்த Petronas இப்போது சவால்களை எதிர்நோக்கியிருந்தாலும் இந்த சவால்கள் காலங்காலமாக இருந்து வருவது தான், அந்த சவால்களை அரசாங்கம் திறம்பட கையாண்டு வந்துள்ளது. முந்தைய காலத்தில் Petronas நிறுவனம் RM80.7 பில்லியனுக்கும் குறையாமல் வருவாய் ஈட்டியது. ஆனால் தற்போது அதன் ஆண்டு வருவாய் RM55.1 பில்லியனை மட்டுமே எட்டியுள்ளது. 32% வீழ்ச்சியை Petronas நிறுவனம் சந்தித்திருப்பதற்கு அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு முக்கிய காரணம் என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin சாடினார்.
Tan Sri Muhyiddin Yassin mengkritik tindakan Anwar mengumumkan pemberhentian 5,000 pekerja Petronas sebagai tidak berperikemanusiaan. Beliau mendakwa pendapatan Petronas menurun 32% akibat kelemahan pentadbiran kerajaan, sekali gus memalukan imej negara dan pengurusan Petronas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *