நஜீப் விடுதலையா? ஜூன் 20 தீர்ப்பு வரும்!

top-news

ஜூன் 11,

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak எதிர்நோக்கியிருக்கும் SRC International தொடர்புடைய RM27 மில்லியன் பணமோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் Mohd Ashrof Adrin Kamarul வும் நஜீப்பின் வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah ஆகிய இருவரும் முழுமையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் எதிர்வரும் ஜூன் 20க்குள் முடிவுகள் வெளியிடப்படும் என நீதிபதி K. Muniandy இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

முன்னதாக நஜீப்பின் வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah நஜீப்பிற்கு எதிரான RM 42 மில்லியன் SRC International பணமோசடி வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதற்கு அரசு தரப்பின் தாமதமே காரணம் என்பதால் அரசு பொதுமன்னிப்பை நடைமுறைப்படுத்த இது தடையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak எதிர்நோக்கியிருக்கும் SRC International தொடர்புடைய பணமோசடியில் சம்மந்தப்பட்டிருக்கும் நிதி 42 மில்லியன் அல்ல, மாறாக அது 27 மில்லியன் ரிங்கிட் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த வழக்கைத் தாமதப்படுத்த எந்தவொரு காரணமும் இல்லை என்றும் இறுதிகட்டமாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சாட்சி ஆவணங்களை விரைந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் நஜீப் விடுவிக்கப்படுவாரா என்பது எதிர்வரும் ஜூன் 20 தேதிக்குள் அறிவிக்கப்படுமென உயர்நீதிமன்ற நீதிபதி K. Muniandy அறிவித்தார்.


Bekas Perdana Menteri Najib Tun Razak menunggu keputusan kes penyelewengan RM27 juta SRC International pada 20 Jun. Semua dokumen telah diserahkan oleh kedua-dua pihak. Peguam Najib mendakwa kerajaan lewat menyebabkan pengampunan tertangguh. Mahkamah sahkan jumlah melibatkan RM27 juta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *