கடலில் 12 கடல் மைல்களுக்குக் குறைவாக மீன்பிடித்த மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
பாதுக்காக்கப்பட்ட கடல் பரப்பில் சட்டவிரோதமாக மீன்களைப் பிடித்த 3 மீனவர்கள் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலா சிலாங்கூர் தென்மேற்கு கடல்பரப்பில் 12 கடல் மைல்களுக்குக் குறைவானக் கடல்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவரையும் ரோந்து பணியிலிருந்த கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகச் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Abdul Muhaimin bin Muhammad Salleh தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரும் 37 வயது, 39 வயது, 53 வயது உள்ளூர் மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களின் படகிலிருந்து 150 கிலோ எடையிலான மீன்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Abdul Muhaimin bin Muhammad Salleh தெரிவித்தார் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் 4.4 கடல் மைல் தொலைவில் மீன்களைப் பிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Abdul Muhaimin bin Muhammad Salleh தெரிவித்தார்.
Tiga nelayan tempatan berusia 37 hingga 53 tahun ditahan oleh Agensi Penguatkuasaan Maritim Selangor kerana menangkap ikan secara haram di perairan 4.4 batu nautika dari pantai Kuala Selangor. Sebanyak 150 kilogram hasil tangkapan dirampas untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *