15 லட்சம் வெள்ளியை ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ஏமாந்த பொறியாளர்!

- Muthu Kumar
- 07 Jun, 2025
புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 7:
பொறியாளர் ஒருவர் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 15 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட 40 வயதான சம்பந்தப்பட்ட நபர், கடந்த ஆண்டு நவம்பரில் தொலைபேசி மூலம் ஒரு பெண்ணிடம் அறிமுகமானதாகவும், அவருடன் தொடர் நட்பில் இருந்ததாகவும் பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமது தெரிவித்தார்.
அந்தப் பெண் கோல்டன் கிரிம்சன் என்ற முதலீட்டுத் திட்டத்தில் சேர அவரை அழைத்துள்ளார். அது நல்ல வருமானத்தை அளித்தது. அந்த நபர் RM 90,510 முதலீடு செய்து RM108,611 வருமானத்தைப் பெற்றுள்ளார்.
பின்னர் அதில் ஏற்பட்ட நம்பிக்கையில் டிசம்பர் முதல் மார்ச் வரை மொத்தம் 15 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 31 வெவ்வேறு கணக்குகளில் 103 பரிவர்த்தனைகளைச் செய்தார்.மேலும் அவர் தனது லாபத்தை எடுக்கத் தவறியபோது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார், ஆனால் பணம் எடுக்க கூடுதல் மூலதனத்தை வழங்குமாறு கேட்கப்பட்டார். இதனை அடுத்து அவர் போலீஸில் புகார் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang jurutera di Bukit Mertajam kerugian lebih RM150,000 akibat penipuan pelaburan dalam talian. Dia mula percaya selepas mendapat keuntungan kecil, namun gagal mengeluarkan wang dan membuat banyak transaksi sebelum menyedari penipuan dan melaporkannya kepada polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *