பச்சரிசி விலை அக்டோபர் மாதத்தில் இறுதி செய்யப்படும்!
- Shan Siva
- 10 Jun, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10: உள்ளூர் பச்சரிசிக்கான (BPT) புதிய திருத்தப்பட்ட விலை அக்டோபர் மாதத்திற்கு முன் இறுதி செய்யப்படும்
என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார அமைச்சு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு (KPDN) ஆகியவை
இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
டத்தோஸ்ரீ முஹமட் சாபு கூறினார்.
உள்ளூர் பச்சரிசி உற்பத்தியில்
ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின், குறிப்பாக
விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, விலையை
அதிகரிப்பதற்கான ஆலோசனையை அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று நாட்டின் அரிசித் தொழில்துறையின் முன்னணி தரப்பினர், பச்சரியின்
விலையை ஒரு கிலோவுக்கு RM2.60 என்ற விகிதத்தில்
உயர்த்துவதற்கான ஆலோசனையை முன்மொழிந்தனர், இது ஒரு
கிலோவுக்கு குறைந்தபட்சம் 25 சென்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *