பலதார திருமணம் செய்ய தாய்லாந்துக்குப் படையெடுக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

நாராதிவாட், ஜூன் 18: கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறைந்தது 30 தம்பதியர் ஒவ்வொரு மாதமும் பலதார மணம் செய்து கொள்வதற்காக மாகாணத்திற்குச் செல்வதாக நாரதிவாட் இஸ்லாமிய மதக் கவுன்சில் வெளிப்படுத்தியுள்ளது.

,இந்த ஜோடிகளில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் உறவுகளை முறைப்படுத்தும் நோக்கத்துடன் வந்ததாகவும், இதற்காக நீண்ட தூரம் பயணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக நாரதிவாட் இஸ்லாமிய மதக் கவுன்சில் துணைத் தலைவர் அப்துல் அஜிஸ் சே மாமத் தெரிவித்தார்.

இருப்பினும், தெற்கு தாய்லாந்தில் திருமணம் செய்வது போல் எளிதானது அல்ல. ஜோடிகளின் பின்னணி சோதனைகள் உட்பட குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

கட்டாய நிபந்தனைகளில் ஒன்று, பெண் விதவையாகவோ அல்லது விவாகரத்து பெற்றவராகவோ இருந்தால், விவாகரத்துச் சான்றிதழ் அல்லது முந்தைய மனைவியின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது சந்தேகத்திற்குரியதாக இருந்தால், அவர்கள் எண்ணம் ஈடேறாது என்று" அவர் அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார்.

தெற்கு தாய்லாந்தில் பலதார மணம் செய்ய விரும்பும் தம்பதிகள், எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்க, மலேசியாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரக அலுவலகத்திலிருந்து சரிபார்ப்பைப் பெற்று, மலேசியாவில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *