கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள் பொருத்தப்படும்!

- Muthu Kumar
- 11 Jun, 2025
ஈப்போ, ஜூன் 11-
உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தின் 15 மாணவர்களின் உயிர்களைப் பறித்த கோர விபத்து நிகழ்ந்திருக்கும், கிரீக்கில் உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை நெடுகிலும் சூரிய சக்தியினால் இயங்கும் 385 தெரு விளக்குகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்நெடுஞ்சாலை நெடுகிலும் பொருத்தப்படவுள்ள விளக்குகளுக்கான டெண்டர் ஏற்கெனவே விடப்பட்டுவிட்டது என்று,பேராக் பொதுப்பணி இலாகா ஜேகேஆர்) இயக்குநர் ஸம்ரி மாட் காசிம் தெரிவித்தார்.
டெண்டர் விடும் பணி முடிந்து விட்டதாகவும் அத்தகைய விளக்குகளை பொருத்தும் குத்தகை வரும் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், சாலை மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு கோடுகளைப் போடுவதற்கான நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டிருப்பதாகக் கூறினார்.அந்த நெடுஞ்சாலையில் விபத்துகள் நிகழ்வதற்கு தெரு விளக்குகள் இல்லாததும் இருட்டாக இருப்பதும் காரணமல்ல என்றும் ஸம்ரி கூறினார்.
கோர விபத்து நிகழ்ந்திருக்கும் பகுதியில் ஆய்வு நடத்துவதற்காகவும் அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காகவும் ஜேகேஆரின் தலைமைத்துவத்தைச் சேர்ந்த சாலை தடயவியல் பிரிவினர் அங்கு சென்றிருக்கின்றனர்.சாலையில் குழிகள் இல்லாத நிலையில், சாலையின் மேல்பரப்பு நல்ல நிலையிலேயே இருப்பது. ஆகக் கடைசியாக அங்கு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் தெரிய வந்திருப்பதாக ஸம்ரி தெரிவித்தார்.
Kerajaan merancang memasang 385 lampu jalan berkuasa solar di Lebuhraya Timur-Barat, lokasi nahas tragis melibatkan 15 pelajar UPSI. Tender telah dibuka dan kontrak dijangka dianugerahkan Julai ini. Keadaan jalan disahkan baik tanpa lubang berbahaya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *