8,000 Pints ரத்தம் கொடுத்த போலீஸார்!
- Shan Siva
- 11 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 11: தேசிய ரத்த மையம் கடந்த 18 ஆண்டுகளில் காவல்துறையினரிடமிருந்து 8,000 பைண்டுகளுக்கு மேல் இரத்தத்தைப் பெற்றுள்ளதாகவும், இது சமூகத்திற்குச் சேவை செய்வதில் இருவருக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு
ஒத்துழைப்பைக் குறிக்கிறது தேசிய ரத்த மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் துன்
மைசுரா முகமது ஃபதுல்லா தெரிவித்தார்.
புக்கிட் அமானில் இன்று
நடைபெற்ற 217வது காவல் தினத்தை
நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த ரத்த
தான நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். சுமார் 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினமும் 2,000 முதல் 2,200 பைகள்
தேவைப்படுவதாக அவர் கூறினார்.
தேசிய ரத்த மையத்தில் மட்டும், 80 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தினசரி 600 முதல் 700 பைகள்
தேவைப்படுகின்றன.
காவல் படையின் அனைத்து
உறுப்பினர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியமான
செயலாக இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பார்கள் என்று நாங்கள் நம்புவதாக
அவர் கூறினார்.
இந்தத் திட்டம் ஒரு வருடாந்திர
நிகழ்வு மட்டுமல்ல, மாறாக
காவல்துறைக்கும் தேசிய ரத்த மையத்திற்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான சான்று என்று தேசிய காவல்துறை தலைவர்
டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
சமூகத்தில் காவல்துறையின் பங்கு
பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கீன அம்சங்களைக் கட்டுப்படுத்துவது என்று மட்டும் அல்ல, ரத்த தானம் செய்வதற்கான உன்னதமான காரணத்தையும் உள்ளடக்கியது, இது சமூகத்திற்கான நமது சமூகப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
எனவே, தேசிய ரத்த மையத்திற்கு சென்று ரத்த தானம் செய்ய நேரம்
ஒதுக்குமாறு ரஸாருதீன் படை உறுப்பினர்களை ஊக்குவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *