கிரீக் கோர சாலை விபத்து போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்!

- Muthu Kumar
- 10 Jun, 2025
கிரீக், ஜூன் 10-
மொத்தம் 15 உப்சி மாணவர்களின் உயிர்களைப் பறித்திருக்கும் கிரீக் கோர சாலை விபத்து மீது உடனடி விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதை போலீசார் நேற்று உறுதிப்படுத்தினர். ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதன் மூலம் மரணம் விளைவித்ததற்கான 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் செக்ஷன் 410இன் கீழ் இவ்விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக, பேராக் மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்."வாகன தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித கவனக் குறைவு உட்பட அனைத்து சாத்தியமான கோணங்களிலும் நாங்கள் விசாரணை நடத்துவோம்.
"விபத்து நிகழ்ந்திருக்கும் சாலைப் பகுதி செங்குத்தாகவும் காற்று பலமாக வீசிவரும் பகுதியாகவும் இருக்கிறது.அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். அதன் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று,நேற்று திங்கள்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நோர் ஹிஷாம் தெரிவித்தார். விபத்து நடந்த சமயத்தில் சாலை வழுக்கலாகவும் ஈரமாகவும் இல்லை என்றும் அப்போது அப்பகுதியில் வெளிச்சம் மங்கலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 40 வயதுடைய அந்த பஸ் ஓட்டுநர் பஸ்சை வேகமாக செலுத்தினாரா என்று கேட்டபோது, அந்த விவகாரம் தற்போதைக்கு ஓர் ஊகமாகவேதான் இருந்து வருகிறது என்று அவர் பதிலளித்தார். இந்நிலையில், விபத்து நிகழ்வதற்கு முன்னர், அந்த பஸ் தமது வாகனத்தை மிக வேகமாக முந்திச் சென்றதாக, ஓர் இணையத்தளவாசி தெரிவித்திருந்தார்.
இந்த விபத்தின்போது பஸ்சில் மொத்தம் 48 பேர் இருந்தனர். அவர்களில் 42 பேர் உப்சி மாணவர்கள். ஒருவர் பஸ் ஓட்டுநர். மற்றொருவர் அவரின் உதவியாளர். விபத்தில் சிக்கிய பெரோடுவா அல்ஸா காரில் நால்வர் இருந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் அவர்களின் ஆறு வயது மகளும் இரண்டு வயது மகனுமே அவர்களாவர். இவர்கள் அனைவரும் காயங்களுக்கு ஆளானதாக இதற்கு முன்னர் கூறப்பட்டது.
Sebanyak 15 pelajar UPSI maut dalam nahas jalan raya di Gerik. Polis memulakan siasatan di bawah Seksyen 41(1) Akta Pengangkutan Jalan 1987. Siasatan merangkumi aspek kecuaian manusia dan kerosakan teknikal. Keadaan jalan tidak licin ketika kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *