ஜொகூர் பாரு கெம்பாஸ் டோலில் நடந்த சண்டை குறித்து போலீஸ் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, ஜூன் 14-

கெம்பாஸ், ஜொகூர்பாரு பகுதியில் உள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெம்பாஸ் டோல் பிளாசாவில் இரண்டு ஆண்களுக்கிடையில் நிகழ்ந்த சண்டை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது. இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகார் ஜூன் 8ஆம் தேதி பிற்பகல் 5.35 மணியளவில், 31 வயதுடைய உள்ளூர்க்காரர் ஒருவர் மூலம் ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி பல்வீர் சிங் தெரிவித்தார்.

விசாரணையின் படி, இந்த சம்பவம் அன்று பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது. புகார் அளித்தவர் ஓர் லோரி ஓட்டுநராக இருப்பவர். அவர் டோல் கட்டணக்கட்டடத்தில் காத்திருந்த போது, முன்னால் இருந்த ஒரு புரோட்டோன் வீரா வகை வாகனம் டோல் தடைத் தண்டம் உயர்த்தப்பட்டிருந்ததால் அந்த வாகனம் அகலாமல் இருந்ததால் புகார் செய்தவர் ஹாரன் அடித்துள்ளார்.

அப்போது, அந்த கார் பயணியிடத்திலிருந்த நபர் ஒருவர் இறங்கியதுடன், லோரி
ஓட்டுநரிடம் கதவைத் திறக்கக் கேட்டார். கதவைத் திறந்தவுடன், அவர் புகாரளித்தவரின் முகத்திலும் தலையிலும் பலமுறை அடித்ததாகக் கூறப்படுகிறது. புகார்தாரர் தன்னை காப்பாற்றும் நோக்கில் அந்த நபரை தன் கால்களால் எத்தி தள்ளியுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் விளைவாக, புகாராளியின் தலையின் பின்புறத்தில் வலியை அனுபவித்துள்ளார். போலீசார் தற்போது இந்த வழக்கை பொது இடத்தில் சண்டையிடுதல் குறித்த மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 160இன் கீழ் விசாரித்து வருகின்றனர்.

Video pergaduhan antara dua lelaki di plaza tol Kempas, Johor Bahru tular di media sosial. Insiden berlaku pada 8 Jun dan melibatkan pemandu lori serta penumpang kereta. Polis sedang menyiasat kes di bawah Seksyen 160 Kanun Keseksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *