பேரங்காடியில் பாடகர் தாக்கப்பட்ட விவகாரம்: போலீசார் விசாரணை!

- Muthu Kumar
- 13 May, 2025
ஜொகூர் பாரு, மே 13-
ஜொகூர் பாருவில் உள்ள பேரங்காடி ஒன்றில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், ஸகின்ஹேட் இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்த பின்னர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில், சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவர் உட்பட எந்தவொரு தரப்பிடமிருந்தும் தங்களுக்கு இதுவரை புகார் எதுவும் கிடைக்கவில்லை என்று ஜொகூர்
பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
நேற்று முன்தின இரவு நிகழ்ந்த அச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணையைத் தொடங்கியதாக அவர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.குற்றவியல் சட்டம் செக்ஷன் 148, தொடர்பு, பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233இன் கீழ், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Polis Johor Bahru sedang menyiasat kes serangan terhadap penyanyi kumpulan Sakinah Beat yang berlaku dua hari lalu di sebuah taman rekreasi. Video kejadian tular di media sosial, namun tiada laporan rasmi diterima setakat ini. Siasatan dijalankan mengikut Seksyen 148 dan Seksyen 233 Akta Komunikasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *