ஆஸ்ட்ரோ தரவுத் தளத்தில் மோசடி வழக்கு மாது நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5-

ஆஸ்ட்ரோ தரவுத் தளத்தில் சட்டவிரோதமான முறையில் மாற்றங்களைச் செய்ததாக 743 குற்றங்களை எதிர்நோக்கியிருக்கும் அந்நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மயங்கி விழுந்தார்.
குற்றவாளிக் கூண்டில் அமர்ந்திருந்த நோரா இடாயு ஜபார் (வயது 48) எனும் அம்மாதுவுக்கு எதிரான முப்பதாவது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

ஆஸ்ட்ரோவின் வர்த்தக ஆதரவு பிரிவில் முன்பு பணியாற்றி வந்தவரான நோரா.
வாடிக்கையாளர் மேலாண்மை முறையில் 743 சாதாரண வாடிக்கையாளர்களின் கணக்குகளை நிறுவனக் கணக்குகளாக மாற்றியமைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். கணக்குகள் மாற்றப்பட்டதால் சம்பந்தப்பட்ட அந்த ஆஸ்ட்ரோ பயனர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டுகளித்து வந்துள்ளனர் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மெனாரா ஐகோன் கட்டடத்தில் செயல்படும் ஆஸ்ட்ரோவின் அலுவலகத்தில் 2013ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் அக்குற்றங்கள் நடைபெற்றுள்ளன. நோரா மீது 1997ஆம் ஆண்டு கணினிக் குற்றங்கள் சட்டத்தின் 50 ஆவது பிரிவின்கீழ் அக்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளனர். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம், ஏழாண்டுகள் சிறை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படலாம்.

அரசுத் தரப்பில் டிபிபி ரொஹாய்சா அப்துல் ரஹ்மான் முன்னிலையானார். நோராவை வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை. நோரா மருத்துவச் சிகிச்சை பெறும் பொருட்டும் ஓய்வெடுக்கும் பொருட்டும் இவ்வழக்கை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிபதி நோர்மா இஸ்மாயில் ஒத்தி வைத்தார். பத்தாயிரம் வெள்ளி பிணையுறுதியில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Seorang bekas kakitangan Astro, Nora Idayu Jabar pengsan di mahkamah selepas menghadapi 743 pertuduhan mengubah akaun pelanggan menjadi akaun korporat secara haram. Kesalahan dilakukan antara 2013 hingga 2020.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *