இப்போது கற்கள் வீசப்படுவதில்லை! - ரஃபிஸி ரம்லி
- Shan Siva
- 04 Jul, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: கடந்த சில வாரங்களாக சுங்கை பக்காப்பில் உள்ள மலாய் வாக்காளர்களிடையே ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.
2022 இல் பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள மலாய் வாக்காளர்கள் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று அஞ்சியதால் கவலை அடைந்திருந்ததாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆட்சியில் இருந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற அச்சங்கள் எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டதாக அவர் கூறினார்.
நேற்றிரவு சுங்கை பக்காப்பில் பேசிய அவர், கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் இந்த அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்று தெரிவித்தார்.
ஆனால் , மலாய் வாக்காளர்களிடையே இந்தக் கவலை இப்போது குறைந்துவிட்டது என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில் நடந்ததைப் போல மலாய் கிராமங்களில் நடைபயணத்தின் போது தம் மீது கற்கள் வீசப்படவில்லை இதற்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *