சிம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் மனநிறைவு! - ஓம்ஸ் பா.தியாகராஜன் நெகிழ்ச்சி

top-news

சிறிய பள்ளியாக இருந்தாலும், மாணவர்களின் எண்ணிக்கையும், தரமானக் கல்வியும், அடிப்படை வசதிகளும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த தென் செபராங் பிறை,சுங்கை பாக்காப் தொகுதியில் செயல்பட்டு வரும் சிம்பா தோட்டத்  தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியைத் தாம் பாராட்டுவதாக ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.


தோட்டத்தின் உட்புறத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் வியக்க வைக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.சில நகர்ப்புறங்களில் அதிகமான அரசாங்க மானியத்தில் பெரியபள்ளிக் கட்டடங்கள் இருந்தாலும்,அதில் மாணவர் எண்ணிக்கை வேதனையளிக்கும் வகையில் உள்ளது என்றார்.

இந்த சிம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பெருமைப்படும் வகையில்  மாணவர்கள் எண்ணிக்கையும்,தரமான ஆசிரியர்கள்,சிறப்பான நிர்வாகமும் இருப்பதை நான் அறிந்துக் கொண்டேன்.இருப்பினும் இங்குள்ள கருவூல மையத்தின் நிலை குறித்து கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் மூலமாக அறிந்துக் கொண்டேன்.

பள்ளிகளில் முறையான அடிப்படை வசதிகள் குறைவின் காரணமாக மாணவர்களின் கல்வியில் எவ்வகையிலும் தேக்கம் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால்,ஓம்ஸ் அறவாரியத்தின் உதவியினால் இப்பள்ளியின் கருவூல மையத்திற்குப் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

         நேற்றுக் காலை இப்பள்ளிக்கு நேரில் வருகைப் புரிந்த செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன்,தமது திருக்கரங்களால் பள்ளியின் கருவூல மையத்தின் உருமாற்று திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.

            ஒரு காலத்தில் பாம்புகள் குடியிருந்த இந்த பள்ளியின் கருவூல மையத்திற்கு புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளதால்,இந்த வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பள்ளி ஆசிரியர்களை கேட்டுக் கொண்டு நல்லாசியை வழங்கியதோடு,மாணவர்களுடனும் சிறிது நேரம் அளவளாவினார்.

           இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் மற்றும் நிபோங் தெபால் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரியுமான தியாகராஜ் சங்கரநாராயணன்,பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வள்ளியம்மாள்,சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் முருகன்,கெடா புக்கிட் செலாம்பாவ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சண்முகம்,செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் பிரதீப் குமார்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பினாங்கு மாநில சிலம்பப் போர்கலைக் கழகத்தின் தலைவர் மாஸ்டர் கவிக்குமார் இரவிச்சந்திரன் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *