ONLINE SCAM மூலம் RM581 மில்லியன் இழப்பு! - YB M.Kulasegaran விளக்கம்!
- Thina S
- 28 Jun, 2024
கடந்த 6 மாதத்தில் 14,490 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த துணை அமைச்சர் M.Kulasegaran தெரிவித்துள்ளர். இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 15 ஆம் திகதி வரையில் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த இழப்பீடு 581 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் என அவர் தெரிவித்தார். கடந்த 2023 இல் 34,495 ONLINE SCAM வழக்குகளால் 1 BILLION ரிங்கிட் இழப்பீடானதாகவும், 2022 ஆம் ஆண்டில் 25,479 ONLINE SCAM வழக்குகளால் 851 மில்லியன் ரிங்கிட் இழப்பீடானதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் ONLINE SCAM குறித்து மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் தனிப்படை ஒன்றினை அமைத்துள்ளதாகவும் இது வரை 3,689 விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தியிருப்பதாகவும் சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த துணை அமைச்சர் M.Kulasegaran நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *