அந்த்ராக்ஸ் தொற்றிய மாடுகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 12-

அந்த்ராக்ஸ் எனும் தொற்று நோயினால் இம்மாதம் முதல் தேதியன்று ஒருவர் உயிரிழந்திருப்பதைத் தாய்லாந்து உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அந்நோய்க் கிருமிகள் தொற்றியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே மாடுகளை மலேசியாவுக்கு அது ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அந்நாட்டுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகக் கடைசி அந்த்ராக்ஸ் நோய் தொற்று குறித்து கடந்த 1976ஆம் ஆண்டில் உலக விலங்குநல அமைப்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, மலேசியாவில் எந்தவொரு அந்த்ராக்ஸ் தொற்றுச் சம்பவமும் ஏற்படவில்லை என்று விலங்கியல் சேவைத்துறை நேற்று தெரிவித்தது.

இந்த தொற்றுநோய்ப் பரவலை கடுமையாகக் கருதுகிறோம். இந்நிலைமையைக் கையாள்வதற்கான மாற்றுவழி என்ன என்பதை தெரிவிக்கும்படி தாய்லாந்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். தாய்லாந்திடமிருந்து மாடுகளையும் எருமைகளையும் மலேசியா இறக்குமதி செய்துவருகிறது.

அந்த தாய்லாந்துக்கு மலேசியா நினைவுறுத்தல் விலங்குகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு முன்பு அவற்றைக் கடுமையாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரிகளை வலியுறுத்தியிருக்கிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மலேசிய விலங்கியல் சேவைத்துறை குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் அந்நோய் அபாயகரமனதாகும். அந்நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் அல்லது அதன் இறைச்சியை உட்கொள்பவர்களுக்கு அந்நோய்க் கிருமிகள் தொற்றலாம். ஆனால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அது பரவாது அந்த்ராக்ஸ் மிக அரிதானவை ஆகும்.

Seorang maut akibat jangkitan anthrax di Thailand. Malaysia mengingatkan Thailand agar hanya mengeksport lembu yang disahkan bebas penyakit. Malaysia belum melaporkan kes anthrax sejak 1976. Penyakit ini jarang berjangkit antara manusia tetapi sangat berbahaya jika dijangkiti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *