மலாக்கா சட்டமன்றத்தின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட வேண்டாம் - ஸாஹிட் வலியுறுத்து!

- Muthu Kumar
- 12 May, 2025
கோலாலம்பூர், மே 12-
மலாக்கா மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீட்டில் உணர்ச்சிவசப்பட்டு விவாதித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று, அம்னோ உறுப்பினர்களையும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து தரப்பினரையும், அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியின் உயர்மட்டத் தலைமைத்துவத்தினால் மட்டுமே மலாக்கா மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்பதால், அது குறித்து யாரும் உணர்ச்சி அடிப்படையில் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.“உணர்ச்சிகரமான பேச்சுகளுக்கும் ஆய்வுகளுக்கும் மற்றும் கருத்துகளுக்கும் இடமளிக்காதீர்கள். தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தை உச்ச தலைமைத்துவத்திடமே விட்டு விடுங்கள்.
“உயர்மட்ட அளவில் உள்ள நாங்கள் அவ்வப்போது சந்தித்து வருகின்றோம். இந்த விவகாரம் குறித்து இதுவரையில் பேசப்படவில்லை.ஆதலால், அம்னோ இளைஞர் பிரிவு அல்லது அமானா இளைஞர் பிரிவாக இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தை எழுப்பத் தேவையில்லை.
“இதைப் பற்றி இப்போது விவாதிப்பது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்” என்று, கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த அம்னோவின் 79ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்போது, தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கிடையில் "அறிக்கைச் சண்டை” நடந்து வருவது குறித்து கருத்துரைக்கும்போது, துணைப் பிரதமருமான ஸாஹிட் இக்கோரிக்கையை விடுத்தார்.
எதிர்வரும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 14 தொகுதிகளிலும் தேசிய முன்னணி 14 தொகுதிகளிலும் சரிசமமாக போட்டியிட வேண்டும் என்று, ஜசெக முதன் முதலில் அறிக்கை விடுத்திருந்தது. அதோடு, மலாக்காவில் உள்ள ஒன்பது ஜசெக கிளைகளும் இந்த வியூகத்தை அங்கீகரித்தும்
இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அறிக்கைவிட்ட அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதிகளில் சிலவற்றை ஜசெகவிடம் அம்னோ நிச்சயமாக வழங்காது என்று கூறியிருந்தார்.வேண்டுமென்றால், ஒரு தொகுதியில் நாம் ஒருவருக்கொருவரை எதிர்த்து போட்டியிடுவோம். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கு ஒருபோதும் (தொகுதிகளை) கொடுக்கவே முடியாது. தொகுதிகள் வழங்கப்படும் என்று நினைத்து நீங்கள் கனவு கண்டு கொண்டே இருங்கள்' என்றும், மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அக்மால் கூறியிருந்தார்.
மலாக்கா மாநிலத்தில் மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் 21 தொகுதிகள் தேசிய முன்னணி வசமும் 5 தொகுதிகள் பக்காத்தான் 3 ஹராப்பான் வசமும் 3 தொகுதிகள் பெரிக்காத்தான் நேஷனல் வசமும் உள்ளன.மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட்டுவிட வேண்டும்.
Presiden UMNO, Zahid Hamidi, menasihatkan semua pihak dalam kerajaan perpaduan supaya tidak beremosi mengenai agihan kerusi DUN Melaka. Keputusan hanya akan dibuat oleh pimpinan tertinggi. Beliau gesa elak kenyataan yang menimbulkan pertelingkahan dalaman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *