மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV உயர்கல்வி அமைச்சு தகவல்!
- Shan Siva
- 03 Jul, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3: நாட்டில் 18 முதல் 25
வயதுக்குட்பட்ட மூன்றாம் நிலை மாணவர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் பொது அல்லது
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் 214 மாணவர்கள் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2021 இல் 186 ஆக குறைந்துள்ளது, ஆனால் 2022 இல் 221 ஆகவும், 2023 இல் 224 ஆகவும் அதிகரித்துள்ளது என்று இன்று நாடாளுமன்றத்தில் அவர்
குறிப்பிட்டார்.
பொது அல்லது தனியார் உயர்கல்வி
நிறுவனங்களில் இருந்து HIV நோயால்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் சதவீதம் குறிப்பிடப்பட்ட ஆண்டுகளில் கண்டறியப்பட்ட
புதிய HIV
சம்பவங்களின் எண்ணிக்கையில் 6.7% முதல் 7.6% வரை உள்ளது என்று அவர்
கூறினார்.
2022 முதல் இந்த ஆண்டு ஜூன்
வரை 22,905 பொதுப் பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்ப்பதற்கும், எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு
ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கும் அமைச்சு 77 எ தடுப்பு திட்டங்களை நடத்தியதாக ஜாம்ப்ரி கூறினார்.
2020 முதல் இன்றுவரை எச்ஐவியால்
பாதிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கூறுமாறு
டத்தோ பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருடின் கேட்டதற்கு அவர் இவ்வாறு
பதிலளித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *