புள்ளிகளுக்காக பாலஸ்தீனியர்களின் துன்பத்தைப் பயன்படுத்தாதீர்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21: பாலஸ்தீனியர்களின் துன்பத்தை அரசியல்வாதிகள் பயன்படுத்தி புள்ளிகளைப் பெறக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.  இது அரசியல் புள்ளிகளைப் பெறுவதற்கான இடம் அல்ல, என்று அன்வார்  செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை GIP எனப்படும்
உலகளாவிய உள்கட்டமைப்பு கூட்டாளர்களுக்கு  விற்க அனுமதிக்கும் முடிவைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலளிபிரதமர் டத்தோஸ்ரீ

இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்களை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு நிறுவனங்களில் அதன் பங்குகள் மூலம் "இனப்படுகொலையில் இருந்து லாபம் ஈட்டுவதாக" குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க முதலீட்டு நிறுவனமான BlackRock உடன் GIP தொடர்பு கொண்டுள்ளது என்று விமர்சகர்கள்  பலர் குற்றம் சாட்டினர்.

நேற்று, கைரி ஜமாலுதீனும் முக்ரிஸ் மகாதீரும் அரசாங்கத்தின் முடிவை விமர்சித்தனர். ஒப்பந்தம் நிறைவேறினால், பாலஸ்தீனத்தின் காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு பிரதமரும் அரசாங்கமும் உடந்தையாக இருப்பதாகக் கூறினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *