அன்வாரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 10: நேற்று பிகேஆர் 2025 தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்ற வேளையில்,, கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை யாரும் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸ்ஸா அன்வாருக்கும், தற்போதைய பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

 உதவித் தலைவர் பதவிக்கு, 12 உறுப்பினர்கள் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

2025-2028 காலத்திற்கான பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு:

சாங் லிஹ் காங் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர்)

நிக் நஸ்மி நிக் அகமது (இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்)

 டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (சிலாங்கூர் மந்திரி பெசார்)

 டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் (நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்)

டத்தோஸ்ரீ ஆர். ரமணன் ( தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர்)

Sim Tze Tzin (பயான் பாருவின் நாடாளுமன்ற உறுப்பினர்)

ஆர்.யுனேஸ்வரன் (செகாமட் நாடாளுமன்ற உறுப்பினர்)டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் (பிகேஆர் ணுலு சிலாங்கூர் பிரிவின் தலைவர்)

 செனட்டர் அபுன் சூய் அனிட் (பிகேஆர் ணூலு ராஜாங்க் பிரிவின் தலைவர்)

 ஹீ லாய் சியான் (சிலாங்கூர் முன்னாள் உறுப்பினர்)

முஸ்தபா கமில் அயூப் (தேசிய தொழில் முனைவோர் நிறுவனத்தின் தலைவர்)

மணிவண்ணன் கோவின் (பிகேஆர் ஜெம்போல் பிரிவின் தலைவர்)

மேலும், நிதியமைச்சர் முஹம்மது கமில் அப்துல் முனிமின் அரசியல் செயலாளர் அங்காடன் மூட கெடிலன் (ஏஎம்கே) தலைவர் பதவிக்கு ஒரே வேட்பாளராக உள்ளார், பிகேஆர் வனிதா தலைமைப் பதவியில் கல்வி அமைச்சராகவும் இருக்கும் ஃபத்லினா சிடெக்கிற்கும் அம்பாங் எம்பி ரோட்சியா இஸ்மாயிலுக்கும் இடையே போட்டி நிலவுகிறது!

Datuk Seri Anwar Ibrahim menang tanpa bertanding jawatan Presiden PKR 2025. Nurul Izzah dan Rafizi bersaing untuk Timbalan Presiden. Sebanyak 12 calon bertanding untuk Naib Presiden, manakala jawatan lain turut menyaksikan pertandingan pelbagai peringkat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *