டூத்தா டோல் விபத்து: நவாரா கார் ஓட்டுநர் வாகனத்தின் உரிமையாளர் அல்லர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 13-

கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய நெடுஞ்சாலையில், கடந்த சனிக்கிழமை மோட்டார்சைக்கிளில் பயணித்த கணவன் மனைவியை மோதிய நிசான் நவாரா வாகன ஓட்டுநர் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தகவலை கோலாலம்பூர், போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறைத் தலைவர் இணை ஆணையர் முஹமட் சம்சூரி முஹமட் இசா, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.சந்தேக நபரின் தடுப்புக் காவலை நீட்டிக்கும் செயல்முறை இன்று மேற்கொள்ளப்பட்ட பின்னர், விசாரணை அறிக்கை விரைவில் அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் - சமர்ப்பிக்கப்படும் என்று முஹமட் சம்சூரி தெரிவித்தார்.

அந்த ஓட்டுநர், பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளை மோதுவதற்கு முன்னர், பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக இதற்கு முன்னர் கூறப்பட்டது.எனினும், இதன் தொடர்பில் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார்சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தற்போது சுயநினைவற்ற நிலையில், சுங்கை பூலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட வாகனத்தைத் தாம் செலுத்தவில்லை என்று அதன் உரிமையாளர் காணொளி ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ, தகவல் தெரிந்தவர்கள் 011-31903054 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Seorang pemandu Nissan Navara yang melanggar pasangan suami isteri bermotosikal di Lembah Klang bukan pemilik kenderaan itu. Wanita mangsa kini koma di ICU Hospital Sungai Buloh. Polis masih menyiasat dan mohon maklumat awam.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *