போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணமோசடி-முன்னாள் பதிவாளர் மீது குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12-

பல்கலைக்கழக நிதியிலிருந்து வெ.826,481.29 தொகையைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைப் பயற்படுத்தியதாகப் பெர்லிஸில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மீது 36 குற்றச்சாட்டுகள் நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

மொத்தம் 826,481.29 வெள்ளியை மோசடி செய்யும் நோக்கத்தில் அங்கீகாரக் கடிதங்களை போலியாக உருவாக்கியதாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரியுமான 40 வயதான முகமது ஃபைருஸ் அல்-ஃபாத்தா படாருடின் குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த 2022 ஜூன் மாதம் 20ஆம் தேதி மற்றும் 2023ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதிக்கு இடையே ஜாலான் ராஜா சூலானில் உள்ள ஒரு வங்கியில் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 468ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 100,000 வெள்ளி ஜாமீனில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க துணை அரசு வழக்கறிஞர் அகமது ஃபாரிஸ் அப்துல் ஹமிட் பரிந்துரைத்தார்.அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்து தேசிய சட்ட உதவி அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி. சிவஜோதி பிள்ளை, தனது கட்சிக்காரர் தற்போது ஒரு விமானப் பயிற்சி நிறுவனத்தில் 2,600 வெள்ளி சம்பளத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருவதால் ஜாமீன் தொகையை 10,000 வெள்ளியாக நிர்ணயிக்கக் கோரினார்

வழக்கு முடியும் வரை தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15,000 வெள்ளி ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி சுசானா ஹுசின் அனுமதியளித்தார்.

Bekas pendaftar universiti swasta di Perlis didakwa atas 36 pertuduhan menggunakan dokumen palsu untuk menipu dana RM826,481.29. Dia mengaku tidak bersalah dan dibebaskan dengan jaminan RM15,000 serta perlu menyerahkan pasport kepada mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *