9 பேரின் மரணத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 13: இன்று காலை தெலுக் இந்தானில் ஒன்பது FRU பணியாளர்களின் உயிரைப் பறித்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈப்போவில் பாதுகாப்புப் பணியில் இருந்து திரும்பி வந்த FRU பிரிவு சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனரான  40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பயன்பாடு சோதனையில் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் பக்ரி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.

கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் மீது ஏற்கனவே ஆறு குற்ற வழக்குகள் உள்ளதாக பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Seorang pemandu lori berusia 40 tahun ditahan susulan kemalangan di Teluk Intan yang meragut sembilan nyawa anggota FRU. Tiada kesan dadah dikesan. Kes disiasat di bawah Seksyen 41 Akta Pengangkutan Jalan 1987. Pemandu itu mempunyai enam rekod jenayah lampau.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *