மோசடியால் RM 203.33 மில்லியன் இழப்பு! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 4: தேசிய மோசடி மறுமொழி மையமான NSRC, மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 37,002 அழைப்புகளைப் பெற்றுள்ளது.  இதன் வழி மே 2024 நிலவரப்படி மொத்தமாக RM203.33 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த அழைப்புகளின் எண்ணிக்கை 95,094 என்று பிரதமர்  தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் மோசடி வழக்குகளுக்காக ராயல் மலேசியா காவல்துறையால் திறக்கப்பட்ட விசாரணை ஆவணங்களின் எண்ணிக்கை 10,649 என்று அவர் குறிப்பிட்டார்.

 இதற்கிடையில், பணமோசடி குற்றத்திற்கான 74 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன, இதில் ர72.38 மில்லியன் மதிப்புள்ள 637 கணக்குகள் முடக்கப்பட்டன என்று PN  Kuala krai MP லத்திஃப்  அப்துல் ரஹ்மா  நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு,  தமது எழுத்துப்பூர்வ பதிலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 
NSRC மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஆகியவை மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அன்வார் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *