நூருல் இஸாவுக்கு வாக்களியுங்கள்! - ரஃபிஸி திடீர் அறிவிப்பு

- Shan Siva
- 13 May, 2025
கோலாலம்பூர், மே 13: கட்சியின் அடுத்த
துணைத் தலைவராக தனது போட்டியாளரான நூருல் இஸ்ஸா அன்வருக்கு வாக்களிக்குமாறு
பிகேஆர் பிரதிநிதிகளுக்கு ரஃபிஸி ரம்லி அழைப்பு விடுத்துள்ளார்.
துணைத் தலைவர்
பதவிக்கான போட்டியில் தனது மகள் தோல்வியடைந்தால், அது பிகேஆர் தலைவரும்
பிரதமருமான அன்வார் இப்ராஹிமுக்கு மோசமாகத் தோன்றும் என்று ரஃபிஸி கூறினார்.
நூருல் இஸ்ஸா
தோற்றால், பிகேஆர் உறுப்பினர்கள் அன்வாரை நிராகரிக்கிறார்கள் என்று பொருள்
படும். அதனால், நூருல் இஸ்ஸா வெற்றி பெற வேண்டும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
நூருல் இஸ்ஸா
போட்டியிடும் முடிவை ஆதரிப்பவர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட
வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ரஃபிஸியும் நூருல் இஸ்ஸாவும் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியில் உள்ளனர், அதில் ரஃபிஸி 2022 கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
Rafizi Ramli menyeru perwakilan PKR menyokong Nurul Izzah sebagai timbalan presiden. Kekalahan Nurul memberi imej buruk kepada Anwar Ibrahim. Beliau meminta penyokong agar tidak keluarkan kenyataan menghina. Kedua-duanya bersaing jawatan itu secara langsung.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *