வீட்டுக் காவல் உத்தரவு வெறும் செவி வழி செய்திதான்! நஜிப்பின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 4: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க, முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லாஹ் அமாட் ஷா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நஜிப் சமர்ப்பித்திருந்த சீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

அப்படிப்பட்ட ஓர்‌ உத்தரவை முன்னாள்‌ பேரரசர்‌ பிறப்பித்துள்ளார்‌ என்று கூறி துணைப்‌ பிரதமர்‌ டத்தோஸ்ரீ  அமாட்‌ ஸாஹிட்‌ ஹமிடி, பகாங்‌ மந்திரி பெசார்‌  டத்தோஸ்ரீ வான்‌ ரோஸ்டி வான்‌ இஸ்மாயில்‌ ஆகியோர்‌  சமர்ப்பித்துள்ள அபிடவிட்மனுக்களும்‌, அந்த விவகாரம்‌ பற்றி பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ பேசியிருப்பதாகக்‌| கூறப்படுவதும்‌ வெறும்‌ செவிவழிச்‌ செய்திகளை அடிப்படையாகக்‌ கொண்டவையாகும்‌ என்று அந்த சீராய்வு   மனுவைத்‌ தள்ளுபடிசெய்தபோது உயர்நீதிமன்ற நீதிதி  டத்தோ அமர்ஜீட்‌ சிங்‌ தெரிவித்தார்‌.  

அத்தீர்ப்பைப்‌ பற்றி உடனடியாக கருத்துரைத்த நஜிப்‌, 'இது வருத்தமளிக்கும்‌ ஒரு செய்தியாகும்‌' என்று தமது முகநூல்‌  பக்கத்தில்‌ குறிப்பிட்டுள்ளா்‌.  

அப்படிப்பட்ட ஓர்‌ உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றுகூடடரசு அரசாங்கம்‌, சட்டத்துறைத்‌ தலைவரின்‌ அலுவலகம்‌, பகாங் அரண்மனை ஆகியவை மறுத்திருப்பதையும்‌ நஜிப்‌ குறைகூறினார்‌.  

அந்த உத்தரவை உள்ளடக்கிய ஆவணமொன்றை  இவ்வாண்டு ஜனவரி 30ஆம்‌ தேதியன்று சிலாங்கூர்‌ மாநில   அம்னோ பொருளாளர்‌ தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல்‌ அப்துல்‌ அஸிஸ்‌ தம்மிடம்‌ காண்பித்ததாக துணைப்‌ பிரதமர்‌ அமாட்‌  ஸாஹிட் தமது அபிடவிட்‌ மனுவில்‌ தெரிவித்திருந்தார்‌. அவரின்‌ அந்தக் கூற்றை பகாங் மந்திரி பெசார்‌ வான்‌ ரோஸ்டியும்‌ தமது அபிடவிட்‌ மனுவில்‌ உறுதிப்படுத்தியிருந்தார்‌.   

ஆயினும்‌, அமாட்ஸாஹிட்டின் அறிக்கைகள்‌ முற்றிலும்‌ செவி வழிச் செய்தியை  அடிப்படையாகக்‌ கொண்டவையாகும்‌ என்று நீதிபதி அமர்ஜிட நேற்று தெரிவித்தார்‌.  

அந்தப்‌ பிற்சேர்க்கை உத்தரவை தெங்கு ஸஃப்ருல்‌ நேரடியாகப்‌ பார்த்தது கிடையாது. தெங்கு ஸஃப்ருல்‌ கூறியதை மட்டுமே அடிப்படையாகக்‌ கொண்டு தமது அபிடவிட்‌ மனுவை அமாட்ஸாஹிட்‌ தாக்கல்‌ செய்துள்ளார்‌ என்றார்‌ அமர்ஜிட்.

உயர்நீதிமன்றத்தின்‌ இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்‌ போவதாக நஜிப்பின்‌ தலைமை வழக்கறிஞர்‌ டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்‌. 

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்‌ வழக்கில்‌ நஜிப்புக்கு பன்னிரண்டு ஆண்டுகள்‌ சிறைத்தண்டனையும்‌, 21 கோடி வெள்ளி அபராதமும்‌ விதிக்கப்பட்டது. கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்திடமும்‌ முறையிட்ட பிறகு, அவரின்‌ சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும்‌ அபராதம்‌ ஐந்து கோடி வெள்ளியாகவும்‌ குறைக்கப்பட்டது. ஜனவரி 29ஆம்‌   தேதியன்று நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின்‌ அக்கூட்டத்திற்கு ' முன்னாள்‌ பேரரார்‌ சுல்தான்‌ அப்துல்லா அமாட் ஷா தலைமையேற்றார்‌.  நஜிப் தமது எஞ்சிய கால சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில்  கழிக்க அனுமதிக்க வேண்டும்‌ என்று அவர் பிற்சேர்க்கையொன்றை வெளியிட்டதாகக்‌ கூறப்படுகிறது. ஆனால்‌, அப்படிப்பட்ட ஓர்‌ உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக்‌.ல் கூறப்படுவதை அரசாங்கம்‌ மறுத்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *