தென்மேற்கு பருவமழை: வறட்சியின் தாக்கம் கடுமையாக இருக்காது!

- Muthu Kumar
- 13 Jun, 2025
புத்ராஜெயா, ஜூன் 13-
செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்க விருக்கும் மே 10ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் தாக்கம், இம்முறை அவ்வளவு கடுமையான சூழலை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சரிசமமான நிலையில் நிலையற்ற சூழலில் தென் பகுதியில் எல் நினோ' (என்சோ) இருப்பதன் காரணத்தினால், கடுமையான வெப்பத்தை இந்த தென்மேற்கு பருவமழை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தென் மேற்கு பருவமழையுடன் அவ்வப்போது தொடர்புப்படுத்தப்படும் வறட்சியின் தாக்கம், இதற்கு முந்திய ஆண்டுகளில் நிலவியது போன்று இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுவதாக, நட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அப்துல் ஹலிம் ஹம்ஸா தெரிவித்தார்.
"தென்மேற்கு பருவமழை தீபகற்பத்தில் அதிக உலர்ந்த வானிலையை ஏற்படுத்தினால்,
என்சோவின் சரிசமமான நிலையானது எல் நினோவுடன் அவ்வப்போது இணைத்துக் கூறப்பட்டு வருவது போன்று இல்லாமல், கடுமையான வறட்சியின் தாக்கம் குறைவாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
“கருக்கமாகச் சொன்னால், இக்காலகட்டத்தில் 'வழக்கமான' வெப்பச் சூழலே நிலவும். இத்தகைய நிலை அக்டோபர் மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று, ஹலிம் கூறினார்.இந்நிலையில், வெப்ப காலநிலையின் தாக்கம் சுகாதாரத்திற்கு இன்னமும் புதர்களில் தீ பரவக் கூடும் மற்றும் விவசாயப் பொருள்களை பாதிக்கவும் செய்யும் சூழல் இருக்கிறது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தீபகற்ப மலேசியாவிலும் சரவாக்கிலும் குறைந்த அளவிலான மழையை பொழியச் செய்யும் என்று கூறிய ஹலிம், பல மாநிலங்களில் அதிக அளவில் மழை ஆபத்தை விளைவிக்கும், குடிநீர் விநியோகத்தைக் குறைக்கச் செய்யும், காடுகள்,பெய்த நிலை மாறி இம்முறை குறைவான அளவிலேயே மழை பெய்யும் என்றார்.
Taufan barat daya yang bermula 10 Mei dijangka tidak menyebabkan cuaca panas melampau kali ini kerana fenomena El Nino berada dalam keadaan neutral. Kesan kemarau dijangka ringan berbanding tahun-tahun lalu, tetapi risiko kesihatan dan kebakaran masih wujud hingga Oktober.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *