நிலமற்றவர்களுக்கு அரசு நிலம்!

- Muthu Kumar
- 12 Jun, 2025
(டிகே.மூர்த்தி)
ஈப்போ, ஜூன் 12-
காலம் காலமாக அரசு நிலத்தில் விவசாயம் மற்றும் சொந்தமாக வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்துள்ள தாப்பா தொகுதியைச் சேர்ந்த சுமார் 458 வசதியற்ற குடும்பங்களுக்கு நிரந்தர நிலப்பட்டா வழங்கியுள்ளதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் தெரிவித்தார்.
மாவட்ட நில அலுவலகத்தின் மூலம் 227 பேர் நிரந்தர நிலப்பட்டாவுக்கு மனு செய்வதற்கான பாரம் 5A கிடைக்கப்பெற்றுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அந்த பாரத்தில் கேட்கப்படும் விடயங்களுக்கு முறையாக பூர்த்தி செய்து நில அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய அந்தச் சிறிய கட்டணத்தைச் செலுத்தி பாரங்களை தாமதிக்காமல் காலத்தோடு (60 நாள்கள்) ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தவிர, 161 பேருக்கு நில அலுவலகம் உத்தரவாதக் கடிதம் கொடுத்துள்ளது. இவர்களுக்கு கூடிய விரைவில் பாரம் 5A வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலப்பட்டா வழங்கும் தினத்தில் அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு பெரிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் நிலப்பட்டா வழங்குவதற்கு முறையாக முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
Sekitar 458 keluarga miskin di kawasan Tapah menerima geran tanah kekal. Seramai 227 orang telah menerima borang 5A dan diminta memulangkannya dalam 60 hari. Seramai 161 orang lagi akan menerima borang tidak lama lagi, kata ADUN Sungai, Sivasenson.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *