மலாக்காவில் கோவிட்-19 சம்பவங்கள் 20%அதிகரிப்பு!

- Muthu Kumar
- 10 Jun, 2025
ஆயர் குரோ, ஜூன் 10-
மலாக்காவில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இம்மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் அவ்வெண்ணிக்கையில் 20 விழுக்காடு அதிகரித்து, 93 புதிய சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. இதற்கு முந்திய வாரத்தில் 77 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருந்ததாக, மாநில சுகாதார, மனித வளம் மற்றும் மாநில ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் ஹீ செம் தெரிவித்தார்.
இந்நிலையில், மலாக்காவில் கோவிட்-19 தொடங்கிய நாள் முதல் இதுவரையில் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 821 பேருக்கு அந்நோய் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.எனினும், இந்நோய்க்காக தற்போது யாரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறவில்லை என்றும் யாரும் மரணமடையவில்லை என்றும் இங் கூறினார்.
Minggu pertama Jun mencatatkan peningkatan 20% kes Covid-19 di Melaka dengan 93 kes baharu. Namun, tiada pesakit dirawat di unit rawatan rapi atau kematian dilaporkan, menurut Exco negeri Datuk Ngwe Hee Sem.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *