அன்வார் பதவி விலகி, வழக்கை எதிர்கொள்ளவாரா? பாஸ் கட்சி சவால்!

top-news

ஜூன் 13,


பிரதமர் அன்வார் மீது அவரின் முன்னாள் உதவியாளர் Muhammed Yusoff Rawther தொடுத்திருக்கும் வழக்கின் விசாரணையை அன்வார் பிரதமராக இல்லாமல் சாதாரண குடிமகனாக எதிர்கொள்ள முடியுமா என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man சவால் விடுத்துள்ளார். பிரதமராக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான விசாரணை மிதமான போக்கிலேயே இருக்கும். ஏனெனில் பிரதமர் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும். விசாரணையை மேற்கொள்ளும் சட்டத்தையே பிரதமர் நினைத்தால் மாற்றி அமைக்க முடியும். விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகள் சாதாரண குடிமகனை விசாரிப்பது போல பிரதமரை விசாரிக்க முடியாது என்பதால் பிரதமராக இருக்கும் அன்வார் பதவி விலகியோ அல்லது ஓய்வில் இருந்தபடி வழக்கை எதிர்நோக்க வேண்டும் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார்.

அன்வார் ஒரு நாட்டின் பிரதமர் என்பதால் விசாரணைகள் யாவும் அன்வாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க எல்லா சாத்தியமும் இருப்பதாக Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். இதற்கு முன்னதாக நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்ட ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் குற்றமற்றவர்கள் என்றே விசாரணை அறிக்கைகள் தெரிவித்துள்ளது. ஆனால் ஆட்சியை விட்டு இறக்கப்பட்டதும் அதே வழக்கில் மீண்டும் குற்றவாளி என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அன்வார் பிரதமராக இருக்கும் வரையில் அவர் மீதான எந்த குற்றச்சாட்டுகளுக்கும் முறையான விசாரணைகள் நடத்தப்படாது என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.


Timbalan Presiden PAS, Tuan Ibrahim Tuan Man mencabar Anwar melepaskan jawatan PM untuk menghadapi kes saman oleh bekas pembantunya, Yusoff Rawther. Beliau mendakwa siasatan terhadap PM sukar dijalankan secara adil kerana kuasa eksekutif yang dimiliki.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *