நீதிமன்ற வழக்கு முடியும் வரை அன்வார் பதவி விலக வேண்டும்! – பாஸ் கட்சி!

top-news

ஜூன் 6,

நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கியிருக்கும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim விசாரணை முடியும்வரையில் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சிலாங்கூர் மாநிலப் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் Mohamed Sukri Omar வலியுறுத்தினார். பிரதமராகப் பொறுப்பிலிருந்தபடியே நீதிமன்ற வழக்குகளை அன்வார் எதிர்கொண்டால் அரசாங்கத்தின் தலையீட்டில் நீதிமன்ற விசாரணை முறையாக இருக்காது என Mohamed Sukri Omar தெரிவித்தார். தேவையற்ற அரசியல் தலையீடுகளால் ஆட்சியில் இருப்பவர்கள் பாதுகாக்கப்படுவார் என அவர் நினைவூட்டினார்.

பிரதமர் அன்வார் தம்மைச் சீர்த்திருத்தவாதியாகக் காட்டிக்கொள்வதால் அவரின் முன்னாள் உதவியாளர் Yusoff Rawther தொடுத்திருக்கும் வழக்கை அன்வார் பிரதமராக எதிர்நோக்காமல் தனி நபராக எதிர்நோக்க வேண்டும். இது அடுத்து வரும் தலைமுறைக்கும் ஓர் உதாரணமாக இருக்கும் என்றும் நீதிமன்ற விசாரணையிலும் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதைப் பொதுமக்கள் நம்ப முடியும் என சிலாங்கூர் மாநிலப் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் Mohamed Sukri Omar வலியுறுத்தினார்.

PAS Selangor menggesa Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim bercuti daripada jawatan sehingga kes mahkamahnya selesai. Mereka mendakwa kehadiran beliau dalam kerajaan boleh menimbulkan persepsi campur tangan politik dalam proses kehakiman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *