அடுக்குமாடிக் குடியிருப்பில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 33 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 11 May, 2025
மே 11,
சிலாங்கூரில் உள்ள கைவிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டினர்கள் நடமாடுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் Seri Kembangan பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 33 வெளிநாட்டினர்களைத் தேசிய குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் 40 அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 73 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தப்பட்டதில் முறையான ஆவணங்கள் இல்லாத 33 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு 2017 ஆம் ஆண்டு முழுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக மின்சாரம் நீர் வசதிகளை மேற்கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த வெளிநாட்டினர்கள் தங்கி வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 33 வெளிநாட்டினர்களும் 25 முதல் 60 வயதினர் என்றும் Bangladesh, Pakistan, Myanmar, India ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணியாக மலேசியாவுக்குள் நுழைந்து கடப்பிதழ்கள் காலாவதியாகியும் மலேசியாவிலேயே சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியது.
Jabatan Imigresen Malaysia menahan 33 PATI dalam serbuan di bangunan terbengkalai di Seri Kembangan yang dijadikan penempatan haram. Operasi membabitkan 40 pegawai itu dilakukan hasil aduan awam. PATI ditahan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *