கேளிக்கை மையத்தில் உல்லாசமாக இருந்த இராணுவ அதிகாரி கைது!

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜூன் 5,
கேளிக்கை மையத்தில் இராணுவ வீரரின் புகைப்படங்கள் ஔிப்பரப்பப்படும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட இராணுவ அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இராணுவ வீரர் தனது காதலியுடனான ஓராண்டு உறவு நிறைவு பெறுவதற்காகக் கேளிக்கை மையத்தில் விருந்தும் உல்லாசக் கொண்டாட்டமும் நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிளாந்தான் I.K.E.M இராணுவப் படையைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட இராணுவ அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இராணுவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும் இராணுவ அரசு சீருடையில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும்படியானப் புகைப்படங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான சம்மந்தப்பட்ட இராணுவ அதிகாரியின் காதலி என நம்பப்படும் திருநங்கையையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang pegawai tentera dari pasukan I.K.E.M Kelantan disiasat selepas video menunjukkan beliau berhibur bersama teman wanita dan tayangan gambar beruniform di pusat hiburan tular di media sosial. Pasangannya yang dipercayai seorang wanita transgender turut ditahan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *