கனரக வாகனம் விழுந்து தொழிலாளர் பலி!

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜூன் 5,
Kundasang ஆற்றுப் பகுதியில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் மீது கனரக வாகனம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தொழிலாளர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக RANAU மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Rantey Fred தெரிவித்தார்.
பலகட்ட போராட்டத்திற்குப் பின்னர் கனரக வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த தொழிலாளரின் உடலைச் சடலமாக மீட்டதாகவும் உயிரிழந்தவர் 41 வயது துப்புரவு தொழிலாளர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் Rantey Fred தெரிவித்தார். சுமார் 2 மணிநேரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இந்த விபத்தில் வேறு தொழிலாளர்கள் காயமடையவில்லை என்றும் RANAU மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Rantey Fred தெரிவித்தார்.
Seorang pekerja pembersihan berusia 41 tahun maut selepas sebuah jentera berat terbalik dan menghempapnya ketika menjalankan tugas berhampiran sungai di Kundasang. Operasi menyelamat mengambil masa dua jam sebelum mayat mangsa berjaya dikeluarkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *