பள்ளி மாணவர்களின் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! – அம்பாங் காவல் துறை அதிரடி!

- Sangeetha K Loganathan
- 12 May, 2025
மே 12,
அம்பாங் சுற்றுவட்டாரத்தில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்துவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று அம்பாங் முதன்மை சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 48 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அம்பாங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் போது தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதாகவும் போக்குவரத்து விதிகளை மீறி அபாயகரமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்துவதாகவும் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெற்று வருவதால் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக Mohd Azam Ismail தெரிவித்தார். தொடர்ந்து இச்சோதனை நடவடிக்கையை அம்பாங்கில் உள்ள முக்கிய சாலைகளில் மேற்கொள்ளவிருப்பதாகவும் பள்ளி மாணவர்களைக் கண்காணிக்கவிருப்பதாகவும் Mohd Azam Ismail தெரிவித்தார்.
Polis mengeluarkan 43 saman dan menyita lima motosikal dalam Op Didik di sebuah sekolah menengah di Ampang bagi memberi kesedaran kepada pelajar mengenai kepatuhan undang-undang jalan raya. Antara kesalahan termasuk tiada lesen, tidak pakai topi keledar dan ubah suai motosikal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *