LRT தண்டவாளத்தில் விழுந்த வெளிநாட்டு ஆடவர் பலி!

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜூன் 5,
ஆடவர் ஒருவர் தண்டவாளத்தில் விழும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து தண்டவாளத்தில் தவறி விழுந்த ஆடவர் தைவானைச் சேர்ந்த சுற்றுப்பயணி என்றும் LRT இரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6.05 மணிக்கு Pusat Bandar Puchong LRT நிலையத்தில் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 63 வயது தைவான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் மலேசியாவுக்குச் சுற்றுலாவை மேற்கொண்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 63 வயது தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் LRT நிலையத்திற்கு வந்ததும் மயங்கி விழுந்ததாகவும் நிலைத்தடுமாறி அவர் தண்டவாளத்தில் விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பதினரிடம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் மேலதிக விசாரணையைக் காவல்துறை மேற்கொள்வர் என்றும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Seorang pelancong lelaki berusia 63 tahun dari Taiwan maut selepas terjatuh ke atas landasan LRT dan dilanggar tren di Stesen Pusat Bandar Puchong. Mangsa dipercayai terjatuh akibat pengsan. Polis sedang menjalankan siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *