ஆடவரை மோதிய வாகனம்! ஓட்டுநர் கைது! ஆடவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவரை மோதி விபத்துக்குள்ளானதில் ஆடவர் படுகாயம் அடைந்தார். நேற்று மாலை 7 மணியளவில் ஷா அலாம் Seksyen 17இல் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஷா அலாம் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து நிலமையைக் கட்டுப்படுத்தியதாக Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய 55 வயதுள்ள உள்ளூர் ஆடவர் போதையில் இருப்பதைக் காவல் துறை உறுதிச் செய்துள்ளது. சம்மந்தப்பட்ட 55 வயது வாகனமோட்டியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட வாகனமோட்டியைக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். இந்த விபத்தில் மற்றொரு வாகனமும் சேதமடைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang lelaki cedera parah selepas dilanggar kereta yang hilang kawalan ketika sedang makan di kedai tepi jalan di Seksyen 17, Shah Alam. Pemandu lelaki berusia 55 tahun yang disahkan mabuk telah ditahan polis untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *