ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 14 Jun, 2025
ஜூன் 14,
நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இன்று காலை 10.05 மணிக்குக் கூலிமில் உள்ள Sungai Sedim சுற்றுலா தளத்திலிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படை அதிகாரிகளுடன் விரைந்ததாகக் கூலீம் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Azmir Hassan தெரிவித்தார். 10 மீட்புப் படை அதிகாரிகள் தேடுதல் பணியை மேற்கொண்ட நிலையில் காலை 11.30 மணிக்கு நீரில் மூழ்கி இளைஞரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக Azmir Hassan தெரிவித்தார்.
உயிரிழந்தவர் சம்மந்தப்பட்ட எந்தவோர் அடையாளமும் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகக் கூலீம் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Azmir Hassan தெரிவித்தார். பிரபலச் சுற்றுலா தளமான Sungai Sedim ஆற்றிலிருந்து உயிரிழந்தவரிந் உடல் காலை 11.30 மணிக்கு மீட்கப்பட்டதும் சுகாதார அதிகாரிகளால் அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்ட நிலையில் அவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூலீம் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Azmir Hassan தெரிவித்தார்.
Seorang pemuda berusia 20 tahun lemas ketika mandi bersama rakan di Sungai Sedim, Kulim. Mayatnya ditemui pada jam 11.30 pagi oleh pasukan penyelamat. Identiti mangsa masih belum dikenal pasti dan siasatan lanjut sedang dijalankan oleh pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *