திருட்டில் ஈடுபட்ட 2 இளம்பெண்கள்! காவல்துறை விசாரணை!

top-news

மே 13,

இளம்பெண்கள் இருவர் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பார்சல்களைத் திருடுவதாகவும் ஆடவர் ஒருவர் சம்மந்தப்பட்ட 2 இளம்பெண்களையும் விசாரிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 2 இளம்பெண்களையும் காவல்துறை தேடி வருவதாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். 

இச்சம்பவர் கடந்த வெள்ளிக் கிழமை ஜொகூரின் மாசாயில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 3.49 மணிக்கு நிகழ்ந்ததாகவும் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பார்சல் திறந்த நிலையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட காணொலியைச் சமூகவலைத்தளத்தில் கண்ட 44 வயது பார்சல் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்மந்தப்பட்ட 2 இளம்பெண்களையும் காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் காணொலியைப் பதிவு செய்த ஆடவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak வலியுறுத்தினார்.

Dua wanita muda disyaki mencuri bungkusan di hadapan rumah di Masai, Johor, kini diburu polis selepas video kejadian tular di media sosial. Polis menggesa individu terlibat dalam rakaman video untuk tampil membuat laporan rasmi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *