போதைப்பொருளுடன் மலேசிய பாடகர் விமான நிலையத்தில் கைது!

top-news

ஜூன் 12,

மலேசியர்கள் மூவர் லாவோசில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 86 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருப்பதைப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் Mat Zani @ Mohd Salahuddin Che Ali உறுதிப்படுத்தினார். கடந்த மே 27, லாவோசில் உள்ள Wattay சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மூவரும் 25 முதல் 29 வயதுக்குற்பட்ட மலேசியர்கள் என்பதையும் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் Mat Zani @ Mohd Salahuddin Che Ali தெரிவித்தார்.

லாவோசில் அவர்கள் மே 27 கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் மே 22 ஆம் நாள் மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு வெளியேறியதாகவும் சம்மந்தப்பட்ட போதைப்பொருள் எந்த நாட்டிலிருந்து கடத்தப்பட்டது என்பதைக் காவல்துறை விசாரித்து வருவதாகவும் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் Mat Zani @ Mohd Salahuddin Che Ali தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்களில் ஒருவர் மலேசியாவின் பிரபலமானப் பாடகர் என முன்னதாக லாவோஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tiga rakyat Malaysia, termasuk seorang penyanyi terkenal, ditahan di Lapangan Terbang Antarabangsa Wattay, Laos pada 27 Mei dengan 86 kilogram dadah. Mereka berusia 25 hingga 29 tahun dan dipercayai keluar dari Malaysia ke Thailand sebelum ditahan. Siasatan lanjut diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *