வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்!

top-news

ஜூன் 16,


வாகனம் நிறுத்துமிடத்தில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இன்று காலை 8.30 மணியளவில் கங்காரில் உள்ள Medan Mahkota சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக Kangar, மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கங்கார் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பைப் பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வழிபறியில் ஈடுப்பட்ட 37 வயது உள்ளூர் ஆடவரைக் கைது செய்ததாகவும் Kangar, மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.

49 வயது உள்ளூர் பெண் வாகனத்திலிருந்து பொருள்களை எடுக்கும் போது 37 வயது ஆடவர் பின்னிருந்து வந்து பெண்ணைத் தாக்கி வழிப்பறியில் ஈடுப்பட்டதாகவும் கூச்சலிட்ட பெண்ணைக் கண்டதும் பொதுமக்கள் குவிந்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரைச் சரமாரியாகத் தாக்கி மயக்கமடைய செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரிடமிருந்து RM1,000 ரொக்கம், USD250 அமேரிக்க டாலர்கள், 10,570 Thailand Bah ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் Kangar, மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.


Seorang lelaki tempatan berusia 37 tahun ditahan selepas cuba meragut seorang wanita berusia 49 tahun di Medan Mahkota, Kangar. Suspek dipukul orang ramai sebelum diserahkan kepada polis. Wang tunai RM1,000, USD250 dan 10,570 Baht dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *