மத நல்லிணக்கத்திற்குப் புதிய செயற்குழு! – ஒற்றுமை அமைச்சர் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

பல இனங்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிலைத்திருக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் வலியுறுத்தினார். சில சமூக வேற்பாடுகளால் பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கோத்தா கினாபாலுவில் மடானி நல்லிணக்க நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 14 ஆகஸ்டு 2020-ல்  சமய நல்லிணக்க செயற்குழு ஒன்றை அமைச்சரவை அமைத்ததாகவும், இஸ்லாமிய சமயம் மற்றும் இஸ்லாமிய அல்லாதவர் சமய அமைப்புகளுக்கிடையே இருந்து வரும் இடைவெளிகளை இணைக்க இந்த செயற்குழுவையை அரசாங்கம் அமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே பல்வேறு சமயத்தினரிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமை துறை அமைச்சு, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா, மலேசிய இஸ்லாமிய புரிந்துணர்வு கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 3 பிரதிநிதிகளும், 10 இஸ்லாமிய உறுப்பினர்களும், 15 இஸ்லாமிய அல்லாத உறுப்பினர்களும் கலந்து கொள்வர் என அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *