சட்டவிரோதமாக எல்லையைக் கடந்த ஐவர் கைது!

top-news

ஜூன் 12,

முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக மலேசியா எல்லையைக் கடந்த ஐவரை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA ஆணையம் கைது செய்தது. சட்டவிரோதமாக இரு நாட்டு எல்லையைக் கடப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் காலை 8.45 முதல் நண்பகல் 1.45 வரையில் PGA ஆணைய அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஐவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் மலேசிய ஆடவர்கள் என்றும் இருவர் தாய்லாந்து பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக இவர்கள் எந்தவோர் ஆவணங்களுமின்றி தொடர்ந்து இரு நாடுகளில் எல்லைகளைப் பல முறை கடந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக PGA ஆணையம் தெரிவித்துள்ளது.


Lima individu termasuk tiga lelaki Malaysia dan dua wanita Thailand ditahan PGA kerana menyeberangi sempadan Malaysia secara haram tanpa dokumen. Mereka dipercayai kerap melintasi sempadan secara tidak sah. Kesemua suspek kini ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *