KEJARA செயல்முறை விரைவில் மாற்றியமைக்கப்படும்!

- Muthu Kumar
- 14 Jun, 2025
ஷா ஆலம், ஜூன் 14-
KEJARA எனப்படும் சாலைக் குற்றங்களுக்கான குறைப் புள்ளிகளை வழங்கும் செயல்முறை கூடிய விரைவில் மிகப் பெரிய அளவில் மாற்றியமைக்கப்படும்.
அச்செயல்முறை பயனற்றது மட்டுமின்றி தோல்வியாகவும் கருதப்படுவதாக போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் தெரிவித்தார்.
போக்குவரத்து குற்றவாளிகள் சம்மனை செலுத்திய பிறகு அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னரே, குறைப் புள்ளிகள் கழிக்கப்படுமே தவிர, அவர்கள்
சம்மன் அறிவிக்கையை பெறும்போது அல்ல என்றும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்."போக்குவரத்து அமைச்சராக, தற்போதைய கெஜாரா செயல்முறை தோல்வியடைந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஏனெனில், எங்கள் அணுகுமுறை தவறானது. அதனால்தான் இந்த செயல்முறை, உண்மையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்றும், செயல்படுத்தப்படும் ஒரு புதிய அணுகுமுறையை அமைச்சு பரிசீலித்து வருவதாக நான் கூறுகிறேன்". என்றார் அவர்.
KEJARA செயல்முறை என்பது, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளின் கீழ்
திட்டமிடப்பட்ட குற்றங்களைச் செய்யும் மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கு குறைப் புள்ளிகளை வழங்கும் ஒரு நடைமுறையாகும்.
Menteri Pengangkutan, Anthony Loke mengakui sistem KEJARA gagal dan perlu dirombak. Sistem sedia ada tidak berkesan kerana mata demerit hanya dikenakan selepas saman dibayar atau didakwa, bukan semasa notis dikeluarkan. Pendekatan baharu sedang dirangka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *