பள்ளி உணவில் நஞ்சு! 2 வயது குழந்தை 17 வயது மாணவர் மரணம்! - சுகாதார அமைச்சு நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோம்பாக்கில் உள்ள பள்ளி நிகழ்ச்சியின் உணவை உண்டு உயிரிழந்த 17 வயது மாணவரும் 2 வயது சிறுமி தொடர்பாகச் சுகாதார அமைச்சு முழுமையான விசாரணையைக் கோரியுள்ளதாகத் சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni தெரிவித்தார். இது தொடர்பாக கோம்பாக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது அனுதாபவத்தையும் அவர் தெரிவித்தார்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 17 வயது மாணவரும் 2 வயது குழந்தையும் MEE BIHUN + TELUR GORENG எனும் ஒரே  வகையான உணவை உற்கொண்டதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் ARIFIN BIN MOHAMAD NASIR உறுதிப்படுத்தினார். இது தொடர்பான விசாரணையைக் காவல் ஆய்வாளர் INSPEKTOR KHALPNA RAJANDHIRAN தொடர்வதாகவும் சம்மந்தப்பட்ட விசாரணைக்கு உதவ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 0125018901 எனும் எண்ணில் அழைத்து சாட்சியம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

இம்மாதிரியானக் கவனக் குறைவு பள்ளிகள் நடந்திருக்க கூடாது என்றும், இது தொடர்பான அதிகாரிகள் மீது கல்வில் அமைச்சும் சுகாதார அமைச்சும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *