நெடுஞ்சாலை ஊழல்! RM143 மில்லியன் சொத்துகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
கிள்ளான் பள்ளத்தாக்கின் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான அரசு நிதியின் ஊழல் தொடர்பான விசாரணையில் சம்மந்தப்பட்டுள்ள தான் ஸ்ரீ பட்டம் கொண்ட ஒரு தொழிலதிபரின் வீட்டில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சோதனை நடத்தியதாக வெளிவரும் செய்தி உண்மை தான் என SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தினார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து காணொலிக் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது Tan Sri Azam Baki மறுத்தார்.
கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டுக்களுக்கிடையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் நெடுஞ்சாலை கட்டுவதற்காக அரசாங்கம் ஒதுக்கிய RM1.67 பில்லியன் SUKUK நிதியுடன் இந்த ஊழல் நிகழ்ந்திருப்பதாகவும் இதுவரையில் தொழிலதிபருக்குச் சொந்தமான RM143 மில்லியன் மதிப்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். சொகுசு வாகனங்கள், விலை உயர்ந்த கை கடிகாரங்கள், கைப்பைகள் என சுமார் RM143 மில்லியன் மதிப்பிலானச் சொத்துகளை விசாரணைக்காகக் கைப்பற்றியிருப்பதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார். மேலும் விசாரணைகளும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருவதால் விரைவில் விசாரணை அறிக்கையை வெளியிடுவதாக Tan Sri Azam Baki தெரிவித்தார்.
SPRM merampas aset bernilai RM143 juta milik seorang ahli perniagaan berpangkat Tan Sri yang disyaki terlibat dalam penyelewengan dana RM1.67 bilion projek lebuh raya Lembah Klang. Aset termasuk kenderaan mewah dan barangan berjenama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *